ஈஷாவில்‌ 'தமிழ்‌ தெம்பு' கோப்பை கபடி போட்டி - ஞானச்‌சுடர்‌ அணி சாம்பியன்‌!

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 3 நாட்கள்‌ நடைபெற்ற 'தமிழ்‌ தெம்பு' கோப்பைக்கான கபடி போட்டியில்‌ ஆண்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ என இரண்டு பிரிவிலும் நல்லார்‌ வயல்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த 'ஞானச்‌ சுடர்‌' அணி ‌சாம்பியன்‌ பட்டத்தைத் தட்டி சென்றது.


கோவை: ஈஷா மையத்தில் நடைபெற்ற 'தமிழ்‌ தெம்பு' கோப்பைக்கான கபடி போட்டியில் நல்லார் வயல் கிராமத்தைச் சேர்ந்த அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.



தமிழ்‌ மண்ணின்‌ கலாச்சாரம்‌, பாரம்பரியம்‌, விளையாட்டு, மருத்துவம்‌ உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டாடும்‌ விதமாக 'தமிழ்‌ தெம்பு' என்ற பெயரில்‌ தமிழ்‌ மண்‌ திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ ஒரு வாரம்‌ நடைபெற்றது.

அதன்‌ ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர்‌ சுற்றுவட்டாரப்‌ பகுதிகளைச்‌ சேர்ந்த இளைஞர்களுக்கான கபடிப்‌ போட்டிகள்‌ பிப்‌. 24, 25, 26 ஆகிய தேதிகளில்‌ ஆதியாகி சிலை முன்பு நடைபெற்றன.



கோவை அமெச்சூர்‌ கபடி கழகத்துடன்‌ இணைந்து நடத்தப்பட்ட இப்போட்டியில்‌ ஆண்கள்‌ பிரிவில்‌ 17 அணிகளும்‌, பெண்கள்‌ பிரிவில்‌ 7 அணிகளும்‌ பங்குபெற்றன. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்‌ ஆண்கள்‌ பிரிவில்‌ 'ப்ளு ஸ்டார்‌' அணியை வீழ்த்தி 'ஞானச்‌ சுடர்‌' அணி முதலிடம்‌ பிடித்தது.



அதேபோல்‌, பெண்கள்‌ பிரிவில்‌ 'சிந்தி வித்யாலயா' அணியை வீழ்த்தி 'ஞானச்‌ சுடர்‌' அணி முதலிடம்‌ வென்றது.

இதுதவிர, நரசீபுரம்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த 'பாரஸ்ட்‌ கிங்‌' அணியும்‌, 'அக்னி சிறகுகள்‌' அணியும்‌, முறையே ஆண்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பிரிவில்‌ மூன்றாவது இடத்தை பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு ஈஷாவின்‌ பிரம்மச்சாரிகள்‌ வெற்றி கேடயங்கள்‌ மற்றும்‌ பரிசு தொகைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்‌.

Newsletter