உடுமலையில் பள்ளிகளுக்கு இடையே ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

உடுமலையில் ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: உடுமலையில் ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. உடுமலை நேதாஜி மைதானத்தில் நடந்த ஸ்கேட்டிங் போட்டிக்கு, உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். ஜாகுவார் ஸ்கேட்டிங் அகடாமி நிறுவனர் நாகராஜன் வரவேற்றார்.





ஸ்கேட்டிங் போட்டிகளை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர். ஜஸ்வந்த் கண்ணன் கொடியசைத்துத் துவக்கி வைத்துப் பேசும் போது, தன்னம்பிக்கையை வளர்க்க இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த15 பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜாகுவார் கேட்டிங் அகாடமி சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter