மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி- உடுமலை ஐடிஐ அணி வெற்றி

உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டியில் ஈரோடு ஐடிஐ அணியுடன் மோதிய உடுமலை அணி 30:28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் உடுமலை ஐடிஐ அணி வென்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

மாணவர் பிரிவில், ஈரோடு, தாராபுரம், கோவை மற்றும் உடுமலை என நான்கு அணிகள் பங்கேற்றன. மாணவியர் பிரிவில் கோபி, தாராபுரம் மற்றும் ஈரோடு என மூன்று அணிகள் கலந்து கொண்டன.

மாணவர் பிரிவு இறுதிப் போட்டியில் உடுமலை ஐ.டி.ஐ அணியும், ஈரோடு ஐடிஐ அணியுடன் மோதியது. இதில் உடுமலை அணி 30:28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மாணவியர் பிரிவில் கோபி ஐடிஐ அணி 14:10 என்ற புள்ளி கணக்கில் தாராபுரம் ஐடிஐ அணியை வென்றது.

Newsletter