பாரா எரிபந்து போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிகள் - கோவை ஆட்சியர் பாராட்டு

நேபாளத்தில் நடைபெற்ற பாரா அமர்வு எரிபந்து போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிகள் மோகன்குமார் மற்றும் சதீஷ்குமாருக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டு தெரிவித்துள்ளார்.



கோவை: நேபாளத்தில் நடைபெற்ற பாரா அமர்வு எரிபந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேபாளம் - இந்தியா இடையேயான பாரா அமர்வு எரிபந்து போட்டி கடந்த பிப்ரவரி 19, 20ஆம் தேதியன்று நேபாளத்தில் நடைபெற்றது.



இதில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சதீஷ்குமார், மோகன்குமார் ஆகிய இருவர் தேர்வாகி இந்திய அணியில் பங்கேற்றனர்.

மொத்தமாக இந்தியா சார்பில் 14 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இதனையடுத்து கோவைக்கு திரும்பிய இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பாராட்டுகளை தெரிவித்தார்.

Newsletter