சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான தென்மண்டல அளவிலான கைப்பந்து இறுதி போட்டியில் கேரளா வயநாடு சென் மேரிஸ் கல்லூரி அணி கோப்பையை வென்றது.


கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான தென்மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டிகள்  à®•ோவை நேரு மைதானத்தில்28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இதில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து6 கல்லூரிகள் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். 



ஏ- பிரிவில் சென்னை ஜேபியர் பொறியியல் கல்லூரி, கோவை ஸ்ரீ அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் பி- பிரிவில்  à®¸à¯à®ªà¯‹à®°à¯à®Ÿà¯à®¸à¯ ஹாஸ்டல் மைசூர் கர்நாடகா வயநாடு சென் மேரிஸ் கல்லூரி à®•ேரளா, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் பங்கேற்றன.இதில் இறுதி போட்டிக்கு சென் மேரிஸ்  à®•ல்லூரி கேரளா அணியும் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணியும் தேர்வாகியது.இன்று நடைபெற்ற விறுவிறுப்பான  à®‡à®±à¯à®¤à®¿ போட்டியில் முதல் செட்டை சென் மேரிஸ்  à®•ல்லூரி அணி 25 23 என்ற வென்றது.சுதாரித்து  à®µà®¿à®³à¯ˆà®¯à®¾à®Ÿà®¿à®¯ ஜேப்பியார் அணி இரண்டாவது செட்டை  25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 

மூன்றாவது செட்டை கேரள சென் மேரிஸ் அணி 25-18 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து யார் வெல்ல போகிறார்கள் என்ற பரபரப்புடன் நடைபெற்ற போட்டியில் 4வது செட்டையும் சென் மேரிஸ் அணி 25-21 பெற்று கோப்பையை தட்டி சென்றது.இதற்கு முன்பு 3 மற்றும் 4 வது இடத்திற்கான போட்டியில் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர்கர்நாடகா அணி பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியை எதிர்த்து விளையாடியது.இதில் முதல் செட்டை 25-17 என்ற புள்ளி கணக்கிலும்  2வது செட்டை அதே புள்ளிகள் 25-17 பெற்று ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர்கர்நாடகா அணி 3வது இடத்தை பிடித்தது. 



வெற்றி பெற்ற சென் மேரிஸ்  à®•ல்லூரி அணிக்கு  à®•ோப்பை மற்றும் 25,000 ரூபாய் பரிசு வழங்கபட்டது. இரண்டாம் இடத்தை பிடித்த ஜேப்பியார் கல்லூரி அணிக்கு  15,000 ரூபாயும், 3ம் இடத்தை பிடித்த ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர் கர்நாடகா அணிக்கு 10,000 மற்றும் 4ம் இடத்தை பிடித்த கிருஷ்ணம்மாள் கல்லூரிக்கு 5,000 ரூபாய் பரிசு தொகையை இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் நந்தகுமார் வழங்கினார்.









Newsletter