ஒரு கையில் சிலம்பம் சுற்றியபடி மற்றொரு கையில் குத்துச்சண்டை - பல்லடத்தில் சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்

பல்லடம் அருகேயுள்ள பார்க் கல்லூரி வளாகத்தில் 132 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரு கையில் சிலம்பம், மற்றொரு கையில் குத்துச்சண்டையை தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக 45 நிமிடம் ஒரு கையில் சிலம்பம் சுற்றியபடி மற்றொரு கையில் குத்துச்சண்டை போட்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.



பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரையில் உள்ள பார்க் கல்லூரி மற்றும் YOUNG INDIA அமைப்பு சார்பில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் திருப்பூர், கோவை, நெல்லை, ராஜபாளையம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் 132 பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் சுமார் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக வலது கையில் சிலம்பம் சுற்றியும், இடது கையில் குத்துச்சண்டை மேற்கொண்டும் உலக சாதனை நிகழ்வை நடத்தினர்.



இந்த நிகழ்வினை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கண்காணிப்பு குழுவினர் புதிய உலக சாதனையாக அங்கீகரித்து பாராட்டினர். மேலும், உலக சாதனை நிகழ்வினை தொடர்ந்து 132 பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பார்க் கல்லூரியின் தாளாளர் பிருந்தா கார்த்திக், கல்லூரி முதல்வர் சரவணகுமார், துணை முதல்வர் கதிரேசன் மற்றும் யுவா அமைப்பு நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 2023 - இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கோவை அணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி இறுதிப்போட்ட...

விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்

நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் இருந்து கற...

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியின் விளையாட்டு விழா கொண்டாட்டம்

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2023 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா கல்லூரியின...

உலக இதய தினத்தை முன்னிட்டு கோவையில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் - கேஜி மருத்துவமனை ஏற்பாடு

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோவையில் கேஜி மருத்துவமனை சா...

ஆதியோகியில்‌ நாளை பிரம்மாண்டமாக நடைபெறும்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா - மத்திய அமைச்சர்‌ அனுராக்‌ தாகூர்‌ பங்கேற்பு

கோவை ஆதியோகி முன்பு நாளை ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர்‌...

துடியலூரில் பூப்பந்து போட்டி - கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி அணி வாகையர் பட்டம்

கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு...