பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மறந்து போன விளையாட்டுகளை நினைவு கூறும் ‘மனமகிழ் விளையாட்டு போட்டி’

பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் மறந்து போன விளையாட்டுகளை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற மனமகிழ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்த மாணவ, மாணவிகள்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மறந்துபோன விளையாட்டுகளை நினைவு கூறும் விதமாக மனமகிழ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.



பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட திறம்பட கேள், மனம் மகிழும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.



பள்ளி நுழைவாயில் இருந்து பள்ளி வளாகம் முழுவதும் தென்னை ஓலை, தென்னங்கீற்றுகள், வாழை, காகித பொம்மைகளால் ஆன தோரணங்கள் கட்டி பொங்கல் வைத்து உற்சாகமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகளான பறை, கரகம், தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, நடனமாடி மாணவ மாணவிகள் அசத்தினர்.



குழந்தை பருவத்தில் விளையாடி மறந்து போன விளையாட்டுகளை நினைவு கூறும் வகையில் கண்ணாமூச்சி, நொண்டி, கயிராட்டம், தாயம், பச்சை குதிரை, பல்லாங்குழி, கபடி, ஒரு குடம் தண்ணீர் ஊத்தி, உறியடி, பாம்பே மிட்டாய் போன்ற விளையாட்டுகளை மாணவ-மாணவிகள் விளையாடி மகிழ்ந்தனர்.



இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் தொலைக்காட்சி மற்றும் செல்போன்களில் மூழ்கிக் கிடைக்கின்றனர்.



இதிலிருந்து அவர்கள் விடுபடவே குழந்தை பருவங்களை நினைவு கூற தொடர்ந்து இந்த பள்ளியில் இதுபோன்ற விளையாட்டுகள் விளையாடி வருவதாக ஆசிரியர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

Newsletter