மாநில அளவிலான கபடி போட்டி - கொமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவியர் அசத்தல்

உடுமலை அருகே மாநில அளவிலான கபடி போட்டி அரசுப் பள்ளி மாணவியர் அசத்தல்.


திருப்பூர்: மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில், உடுமலையை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஜூனியர் பிரிவில், மூன்றாமிடம் பிடித்தனர்.

ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில், லயன்ஸ் கிளப் மற்றும் ராஜீவ்காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில், உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியரும் பங்கேற்றனர்.

அதில், ஜூனியர் பிரிவில், மூன்றாமிடம் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவியரை தலைமையாசிரியர் மாரியப்பன், உடற் கல்வி ஆசிரியர்கள் சந்திரபாபு, விஜயராகவன், சலுகாமா ஆகியோர் வாழ்த்தினர். தொடர்ந்து, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று,கோப்பை வெல்வதே லட்சியம் என, மாணவியர் தெரிவித்தனர்.

மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில், கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஜூனியர் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter