பள்ளபாளையத்தில் தனியார் பள்ளியில் 10ஆம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்

உடுமலை அருகே பள்ளபாளையம் ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டம்.


திருப்பூர்: பள்ளபாளையம் ஸ்ரீஆதர்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் களியாட்டம்-2023 என்ற தலைப்பில் 10ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள ஸ்ரீ ஆதர்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் களியாட்டம்-2023 என்ற தலைப்பில் 10ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் முதல்வர் சிறப்புரை ஆற்றினார்.

உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழிவேல் தலைமை ஏற்று விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்தனர். இதையடுத்து பல்வேறு வகையான விளையாட்டுக்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கி நடைபெற்றது.

இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்கள், பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளி துணை முதல்வர் ஜோதிலட்சுமி நன்றி உரை ஆற்றினார்.

இதேபோன்று தனியார் அமைப்புகள் நடத்திய தமிழர் பண்பாட்டுத் திருவிழா என்ற முப்பெரும் விழாவில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன.



அதில் ஆதர்ஷ் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுடன் பல்வேறு பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Newsletter