மாநில அளவிலான வாலிபால் போட்டி - கோவை கற்பகம் பல்கலை அணி சாம்பியன்!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில், கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை: மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

சேலம் மாவட்டம் சுண்டமேட்டூர் மைதானத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சிறந்த ஆறு அணிகள் கலந்து கொண்டனர். முதல் லீக் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணி சேலம் அணியுடன் மோதியது.

இதில் 0-2 என்ற புள்ளி அடிப்படையில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது. இரண்டாம் லீக் ஆட்டத்தில் கற்பகம் பல்கலை அணி, ஈரோடு கொங்கு கல்லூரி அணியுடன் மோதியது.

இதில் 2-0 என்ற புள்ளி அடிப்படையில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது. இறுதி லீக் ஆட்டத்தில் கற்பகம் பல்கலை அணி ஏவி ஸ் கல்லூரி அணியுடன் மோதியது. இதில் 2-0 என்று புள்ளி அடிப்படையில் அபார வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வித் துறை இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter