சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான தென்மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டி-2017


கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான தென்மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 7 மணியளவில் கோவை நேரு மைதானத்தில் நடைபெற்றது. 

விழாவில்  à®•ோவை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் புரவலர் மற்றும் வி.ஆர்.ஜி குரூப் ஆஃப் கம்பெனி தலைவர் கோவிந்தராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டை துவங்கி வைத்தார்.



மார்ச் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் கைப்பந்துப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். மொத்தம் ஆறு கால்லூரிகள் பங்கேற்கவுள்ளது. ஏ- பிரிவில் சென்னை ஜெபியர் பொறியியல் கல்லூரி,  à®•ோவை ஸ்ரீ அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிகள் விளையாட உள்ளது. 



அதேபோல் பி- பிரிவில் மைசூர் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்திய ஹாஸ்டல், வயநாடு ஸ்டேன்ஸ் மெரி கல்லூரி, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் பங்கேற்கவுள்ளது. 

இம்மாதம் 31ம் தேதி அன்று நிறைவுவிழாவின் போது கைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகள் வழங்கப்படவுள்ளது. 



இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஏ- பிரிவில் சென்னை ஜெபியர் பொறியியல் கல்லூரி அணி மற்றும் கோவை ஸ்ரீ அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் அணிகள்மோதியது. 



தொடக்க விழாவில், கோவை மாவட்ட எஸ்.டி.ஏ.டீ விளையாட்டு அலுவலர் குமார், தலைமை மண்டல மேலாளர் அன்பழகன், கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் ஆறுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter