உடுமலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்த வீரர்கள் கவுரவிப்பு

உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்குக் கேடயம் வழங்கி கவுரவிப்பு.



திருப்பூர்: உடுமலையில் சேரா துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சேரா துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ராகல்பாவி பிரிவு கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு 9வயது சிறுவர்கள் முதல் 90 வயது முதியவர்கள் வரை துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 47ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 14-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் தெற்கு மண்டல அளவிலான போட்டிகளில் நான்கு வீரர்கள் தகுதி பெற்றனர்.

65ஆவது தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், சேரா பயிற்சி மையத்தைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் அணு ஆகியோர் பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.



இந்த வீரர்களைக் கவுரவித்து, பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கும் விழா இன்று குடியரசு தினத்தன்று உடுமலைப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

வருங்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதே சேரா துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் குறிக்கோள் என மையத்தின் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.



மேலும், இவ்விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter