உடுமலையில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூங்காவியில் திமுக இளைஞரணி சுற்றுச்சூழல் அணி விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

போக்குவரத்து பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.



காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில் பகுதியில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் இந்த மாரத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.



சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மராத்தான் ஓட்டப் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் கிழக்கு à®’ன்றிய à®ªà¯Šà®°à¯à®³à®¾à®³à®°à¯ எம்.ஏ.சாகுல் அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter