திருப்பூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்பு

வெங்கமேடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை எம்.எல்.ஏ., எம்.பி., மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.



இந்த மாரத்தான் போட்டியை சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், ஆனந்தன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



4 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோர் என தனித்தனியாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.



இதேபோல், 5 கிலோ மீட்டர் பிரிவு, 10 கிலோ மீட்டர் பிரிவு என மொத்தம் 4 பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இறுதியாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter