ஈஷா சார்பில் விளையாட்டுப் போட்டியில் வென்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கல்

ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் மண்‌ காப்போம்‌ என்ற தலைப்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வென்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை ஈஷா அவுட்ரீச்‌ அமைப்பு சார்பில்‌ கடந்த டிசம்பர்‌ 31ஆம்‌ தேதி முதல்‌ ஜனவரி 8ஆம்‌ தேதி வரை ஆதியோகி சிலை முன்பு 'மண்‌ காப்போம்‌' என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.



இப்போட்டிகளில்‌ தொண்டாமுத்தூர்‌ சுற்றுவட்டார கிராமங்களைச்‌ சேர்ந்த சுமார்‌ 400 இளம்‌ வீரர்‌, வீராங்கனைகள்‌ பங்கேற்றனர்‌.

ஆண்களுக்கான வாலிபால்‌ போட்டியில்‌ 29 அணிகளும்‌, பெண்களுக்கான த்ரோபால்‌ போட்டியில்‌ 8 அணிகளும்‌ பங்கேற்றன.



இந்த போட்டிகளின் இறுதியாட்டம்‌ கடந்த ஜனவரி 8ஆம்‌ தேதியன்று ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. ஆட்டத்தின்‌ முடிவில்‌ வாலிபால்‌ போட்டியில்‌ மத்வராயபுரம்‌ அணி முதலிடத்தையும்‌, தேவராயபுரம்‌ அணி இரண்டாம்‌ இடத்தையும்‌ வென்றன.



த்ரோபால்‌ போட்டியில்‌ புள்ளாக்கவுண்டன்‌ புதூர்‌ அணி முதலிடத்தையும்‌, தேவாரயபுரம்‌ அணி இரண்டாம்‌ இடத்தையும்‌ வென்றன.



வெற்றி பெற்ற அணிகளுக்கு இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்‌ சதானந்தம்‌ வெற்றிக் கோப்பையும்‌, பரிசுத் தொகையும்‌ வழங்கி பாராட்டு தெரிவித்தார்‌.

Newsletter