20 மணி நேரம் சிலம்பம் சுற்றி கோவை மாணவன் சாதனை - மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

கோவையில் உள்ள முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்று வரும் பாலமுரளி கிருஷ்ணா என்ற மாணவன் தொடர்ந்து 20 மணி நேரம் 23 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.



கோவை: கோவை சின்னவேடம்பட்டி மற்றும் சேரன் மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ - மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை, வேல்கம்பு, வாள்வீச்சு, வளரி, மான்கொம்பு, சுருள்வாள், வாள்வீச்சு போன்ற பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டு வருகிறது.



இங்கு பயிற்சி பெற்று வரும் சின்னவேடம்பட்டி பகுதியை கார்த்திக் குமார், சரண்யா தேவி ஆகியோரின் 11 வயது மகனான பாலமுரளி கிருஷ்ணா தொடர்ந்து 20 மணி நேரம் 23 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.



இவர், இந்தியா உலக சாதனை புத்தகம், அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் மற்றும் யூரோப்பியன் உலக சாதனை புத்தகம் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சிறுவனுக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.



தொடர்ந்து, பாலமுரளிகிருஷ்ணாவிற்கு பதக்கம், சான்றிதழ், மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், துணை பயிற்சியாளர்கள், முல்லை தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழக மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் உலக சாதனைகள் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter