கோவை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேட்மிண்டன் போட்டி - அறிமுக விளம்பரத்தை வெளியிட்ட மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை மாநகர காவல்துறை சார்பில் வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல் நடைபெற உள்ள இரட்டையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற உள்ளன.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் மற்றும் போதைப் பொருட்கள் மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேட்மிண்டன் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல்துறை, Sparkling Starz என்ற குழுவுடன் இணைந்து இரட்டையர் பிரிவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (Men and Women doubles) தனித்தனியாக பேட்மிட்டன் (Badminton) தொடர் நடத்தப்பட உள்ளது.

காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக நடைபெறும் இந்த பேட்மிண்டன் போட்டியானது வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேட்மிண்டன் தொடருக்கான அறிமுக விளம்பரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.



இந்த பேட்மினடன் தொடரில் முதல் பரிசாக 7,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 4,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 8838914505 மற்றும் 9952123414 ஆகிய அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 5ஆம் தேதியே கடைசி நாளாகும்.

இந்நிலையில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாக சமீபத்தில் கோவை மாநகர காவல்துறையினர் CCP என்ற கிரிக்கெட் போட்டியை நடத்தியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter