கோவை வேளாண் பல்கலை.யில் இன்று முதல் மண்டல அளவிளான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ தொடக்கம்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரிகளுக்கு இடையே இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் 4 மண்டலங்களை சேர்ந்த 4,000 மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்‌ கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் இன்ரு முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண்‌ கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப்‌ போட்டிகள் இன்று (02.12.2022) முதல்‌ வரும் 14ஆம் வரை நடைபெறவுள்ளன.

நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட 4,000 மாணவ மாணவியர்‌ பங்கேற்கும்‌ பிரம்மாண்ட விளையாட்டுப்‌ போட்டிகள்‌ வரும் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ஆண்டுதோறும்‌ நடைபெற்று வரும்‌ கல்லூரிகளுக்கிடையயான இந்த விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ மாணவ மாணவியர்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ பங்குபெறுகிறார்கள்‌.



இந்நிகழ்வின்‌ தொடக்க விழாவினை இன்று பல்கலைக்கழக விளையாட்டரங்கில்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌, முனைவர்‌. வெ. கீதாலட்சுமி, தேசிய மற்றும்‌ பல்கலைக்கழக கொடிகளை ஏற்றியும்‌, ஒலிம்பிக்‌ விளக்கை ஏற்றியும்‌ துவக்கி வைத்தார்‌.



தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரியின் விளையாட்டுச்‌ செயலரின்‌ தலைமையில்‌ விளையாட்டு வீரர்கள்‌ உறுதிமொழி எடுத்துக்‌ கொண்டனர்‌.

இந்த 15 நாள்‌ நிகழ்வை மாணவர் நல மைய முதன்மையர் முனைவர்‌. ந.மரகதம்‌ வரவேற்புரையாற்றி துவங்கினார். கல்லூரி முதல்வர்கள்‌ பாராட்டு மற்றும்‌ வாழ்த்துரை கூறினர்‌. இப்பெரும்‌ தொடக்க விழாவை சிறப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும்‌ விளையாட்டுத்துறை உதவி இயக்குனர்‌ டாக்டர்‌.ஜே.பி.தேசிக ஸ்ரீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முதல்‌ மண்டலத்திற்கு உட்பட்ட 10 கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப்‌ போட்டிகள்‌ ஆரம்பமானது. முதற்கட்டமாக 10 கல்லூரிகளைச்‌ சேர்ந்த 920 மாணவ மாணவிகள்‌‌ விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ பங்கேற்றனர்.



இதில் உட்புறம் (indoor) மற்றும்‌ வெளிப்புறம் (outdoor) என 10 வகையான விளையாட்டு போட்டிகள்‌ நடைபெற்றன.

Newsletter