கோவை விமானப்படை பள்ளியில் மாணவர்களுக்கான தடகள போட்டி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கேலோ பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தடகள போட்டியில் 17 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து போட்டியை துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் 'கேலோ பாரத் அபியான்' இன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கிடையே தடகள போட்டிகள் நடைபெற்றது.



இப்போட்டியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜோதி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.



17 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 100, 200, 300, 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில், விமானப்படை நிர்வாக கல்லூரியின் கமாண்ட்ண்ட் கமடோர் ஆர்.வி.ராம்கிஷோர், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.

Newsletter