அண்ணா பல்கலைக்கழக 11 வது மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு பொறியியல் கல்லூரி வெற்றி

கோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 வது மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டியில் குமரகுரு பொறியியல் கல்லூரி அரசு தொழில்நுட்ப கல்லூரி அணியை 53 க்கு 23 என்ற புள்ளி கணக்கில் வென்று முதலிடத்தை பிடித்ததுள்ளது.



கோவை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பதினோராவது மண்டல பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி துடியலூரை அடுத்த வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி உடற்கல்வியல் துறை சார்பாக கல்லூரி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியினை கல்லூரி முதல்வர் முனைவர் என் ஆர் அலமேலு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.



இப்போட்டியில் சுமார் 75 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஒரு நாள் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் காலிறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி அணி எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரி அணியை 26க்கு 4 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

அரை இறுதி போட்டியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணி எஸ் என் எஸ் தொழில்நுட்ப கல்லூரி அணியை 44 க்கு 5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. அதேபோல் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் அரசு தொழில்நுட்ப கல்லூரி அணி ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி அணியை 20 க்கு 16 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி அணி எஸ் என் எஸ் தொழில்நுட்ப கல்லூரி அணியை 33க்கு 12 என்ற புள்ளி கணக்கில் வென்றது. முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணி அரசு தொழில்நுட்ப கல்லூரி அணியை 53 க்கு 23 என்ற புள்ளி கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.



இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நிர்மலா தேவி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் நித்தியானந்தன் , உமாராணி ஆகியோர் செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறை துணைத் தலைவர் உதயராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter