கோவையில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவ-மாணவியர்..!

ஸ்கேட்டிங்கை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பாக கோவை நீலம்பூரில் உள்ள டெக்கத்லான் தனியார் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பாக கோவை நீலம்பூரில் உள்ள டெக்காத்லான் தனியார் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.



ஸ்கேட்டிங்கை ஊக்குவிக்கும் விதமாக நடந்த இப்போட்டியில், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த நான்கு வயது சிறார்கள் முதல் 25 வயது வரையிலானவர்கள் ஐநூறு பேர் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.



போட்டியில், பங்கேற்று முதல், இரண்டு, மூன்றாம் இடங்களை வென்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



மேலும், போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அளவிலான போட்டியை நடத்திய குழுவிலிருந்து பேசிய ஸ்கேட்டிங் வீரர் ராகுல் பாண்டியன், ஸ்கேட்டிங்கை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டி நடத்துவதாக தெரிவித்திருக்கின்றார். சிறார்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் ஆவலுடன் ஸ்கேட்டிங்க் செய்ததாக தெரிவித்த அவர், இந்த போட்டியை அனைவரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக போட்டிகள் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய உலக அளவில் நடக்கின்ற விளையாட்டு போட்டிகளில் ஸ்கேட்டிங் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், காமன்வெல்த் போட்டியில் ஸ்கேட்டிங் இடம் பெற்றிருப்பதாகவும், உலக அளவில் விளையாட்டுக்காக போற்றப்படும் ஒலிம்பிக்கிலும் ஸ்கேட்டிங் இடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter