பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் பள்ளியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் இன்று மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.



இதில், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 13 மாவட்டங்களில் இயங்கும் இருபது பள்ளிகளை சேர்ந்த 200 நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர்.



இப்போட்டி “ஃப்ரீ ஸ்டைல்”, “பட்டர்பிளை”, “பேக்ஸ்டோக்” போன்ற பிரிவுகளின் கீழ் 14 வயது முதல் 19 வயது வரை கொண்ட வீரர்களுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வழங்கப்பட்டன.



இதையடுத்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று அதிக பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் வழங்க உள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து, நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Newsletter