கோவையில் 56-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் இன்று துவங்கியது

கோவையில் கடந்த 55 ஆண்டுகளாக நடக்கும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.


கோவை: கோவையில் கடந்த 55 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.



இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும். பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும், அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

இதில் பஞ்சாப் போலீஸ் அணி, லோனாவாலா இந்திய கப்பல் படை அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, சென்னை, ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி - சென்னை, ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்), கேரளா மாநில மின்சார வாரிய அணி, பெங்களூர் போலீஸ் அணி மற்றும் பெங்களூரு பேங்க் ஆஃப் பரோடா - ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.



வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000.00 மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50,000.00 மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.20,000.00 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 15,000.00 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000.00 பரிசாக வழங்கப்படும்.

போட்டிகள் இன்று (03.08.2012) முதல் தினமும் மாலை 5 மணிக்கு நடைபெறும். இன்று துவங்கிய போட்டிகளை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்தார். பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர். கே. பிரகாசம் முன்னிலை வகித்தார்.

இன்றைய (03.08.2022) முதல் போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 92 : 91 என்ற புள்ளிகணக்கில் வெற்றியடைந்தது.



இரண்டாவது போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்சார வாரிய அணி 60 / 55 என்ற புள்ளிகணக்கில் வென்றது.

மூன்றாவது போட்டியில் கேரள போலீஸ் அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி விளையாடியது (இந்தியன் வங்கி அணிக்கு பதிலாக ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி விளையாடியது). இதில் ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி 73 / 64 என்ற புள்ளிகணக்கில் வென்றது.

நான்காவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) விளையாடியது. இதில் ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) அணி 85 / 71 என்ற புள்ளிகணக்கில் வென்றது.

நாளைய (04.08.2022) போட்டி விபரம் முதல் போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரள போலீஸ் அணி விளையாடுகின்றது. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரியம் அணி விளையாடுகின்றது. மூன்றாவது போட்டியில் ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணியை எதிர்த்து ஸ்போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி விளையாடுகின்றது. நான்காவது போட்டியில் ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணியை (ஐசிஎஃப்) எதிர்த்து பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடுகின்றது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 7 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகின்றது.

Newsletter