கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோவையில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்..!

ரவுண்ட் 2 ஆப் ப்ளூ பேண்ட் FMSCI இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2022 வரும் வெள்ளி முதல் ஞாயிறு வரை (ஜூலை 29-31) நடைபெறுகிறது.



கோவை: கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நான்கு சக்கர வாகனங்களுக்கான ப்ளூ பேண்ட் FMSCI இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2022 - இரண்டாம் சுற்று கோவையில் வரும் வெள்ளி முதல் ஞாயிறு வரை (ஜூலை 29-31) நடைபெறுகிறது.



இந்திய முழுவதும் இருந்து மொத்தம் 8 அணிகள் சார்பில் 54 கார்கள் இதில் கலந்து கொள்ள உள்ளன. இந்த ராலி சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் என இரு பிரிவுகளில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை வாகனங்களின் பரிசோதனை மற்றும் கொடியசைத்து நிகழ்வுகள் நடைபெறும். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியில் வெள்ளி மாலை 5 மணிக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS கொடியசைத்து நிகழ்வை துவக்கி வைப்பார்.



அதன் பின் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பந்தய களங்களான வெள்ளலூர் பகுதியில் உள்ள ஜி-ஸ்கொயர் சிட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும் கோவையை அடுத்துள்ள கேத்தனூர் பகுதியில் உள்ள காற்றாலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை L&T Bypass Road பகுதியிலும் ஞாயிறு காலை 9.30 மணி முதல் மதியம் 2 வரையும் கேத்தனூரில் உள்ள 4 கார்னர் சந்திப்பில் நடைபெறும்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி பதக்கங்களை கேத்தனூர் பகுதியில் உள்ள விநாயக மஹால் கல்யாண மண்டபத்தில் மாலை 3:30க்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6,00,000 ரூபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களும் பொதுமக்கள், பந்தய பிரியர்கள் இந்நிகழ்ச்சியினை இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம். அவர்கள் பாதுகாப்பாக அமர்ந்து பார்க்க பிரத்தியேக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

2022 முதல் 2024 வரை நடக்கவிருக்கும் FMSCI யின் சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு கோவையில் செயல்படும் ப்ளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ ப்ரோ மொடேரா அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், முதல் சாம்பியன்ஷிப் சுற்று கடந்த ஏப்ரல் மாதம் 22-25 தேதி வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டாம் சுற்று கோவையில் நடைபெறுகிறது. அடுத்தடுத்த சுற்றுகள் பெங்களூரு மற்றும் நாகாலாந்தில் நடக்கவிருக்கிறது.

Newsletter