தமிழ்நாடு இளையோர் கிரிக்கெட் கேப்டனாக கோவை மாணவர் தேர்வு

தமிழக இளையோருக்கான அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பிரவீனுக்கு காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால்.தினகரன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


கோவை: காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.காம் 3-ம் ஆண்டு பயின்று வரும் பிரவீன் தியாகராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகையை சார்ந்த பிரவீன் தியாகராஜன் காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.காம் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்.

தற்போது இளையோருக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரவீன் கூறுகையில் நீலகிரி மாவட்டம், உதகையில் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்தேன், பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்ததால் என்னுடன் விளையாடியவர்கள் என்னை ஊக்கப்படுத்தியதால் தான் தற்போது கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அனைவரும் முயற்சி செய்தால் கிரிக்கெட்டில் சாதிக்கலாம், கனவை நோக்கி பயணப்பட்டால் வெற்றி எளிது எனவும், சென்னை, ஹைதராப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விளையாடியுள்ளேன். தேசிய அளவில் சாதிப்பேன் என்றும், சிறிய வயதில் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தான் ஆல் ரவுண்டராக இருப்பதால் அனைவரையும் ஒருங்கிணைத்து அணியின் வெற்றிக்கு பாடு படுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.



முன்னதாக தமிழக இளையோருக்கான அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பிரவீனுக்கு காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால்.தினகரன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல்கலைக்கழகம் சார்பில் செய்து தரப்படும் என வேந்தர் பால்.தினகரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter