தாய்லாந்தில் நடந்த தெற்காசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு பாராட்டு..!

தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ., கே.ஆர்.ஜெயராம் தலைமையில் பாராட்டு விழா நடத்தி, அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.


கோவை: தெற்காசிய அளவிலான பல்வேறு போட்டிகள் தாய்லாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இதில், கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான முறையில் விளையாடி வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.



தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ., கே. ஆர்.ஜெயராம் தலைமையில் பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது. அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

Newsletter