பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் 31வது பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள்


31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கும் தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது.



ஆண்கள் அணி:- முதல் போட்டியில் லூதியான கூடைப்பந்து அகாடமியை எதிர்த்து பெங்களூரூ ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடிது. இதில் ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 87 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய லூதியான கூடைப்பந்து அகாடமி அணி 64 புள்ளிகள் பெற்றது.

இரண்டாவது போட்டியில் டெக்ராடூன் ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து குஜராத் வருமான வரி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 88 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய வருமான வரி அணி 71 புள்ளிகள் பெற்றது. 

மூன்றாவது போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து கொச்சி, சுங்கம் மற்றும் மத்திய கலால் அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 87 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய கொச்சி, சுங்கம் மற்றும் மத்திய கலால் அணி 52 புள்ளிகள் பெற்றது.

நான்காவது போட்டியில் சென்ரல் இரயில்வே அணியை எதிர்த்து சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 75 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சென்ரல் இரயில்வே அணி 58 புள்ளிகள் பெற்றது.



பெண்கள் முதல் போட்டியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து கேரளா அணி விளையாடியது. இதில் மேற்கு வங்க அணி 76 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. கேரள அணி 55 புள்ளிகள் பெற்றது.

இரண்டாவது போட்டியில் சத்தீஸ்கர் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் சத்தீஸ்கர் அணி 105 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி 75 புள்ளிகள் பெற்றது.

மூன்றாவது போட்டியில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து தெலுங்கான அணி விளையாடியது. இதில் தென்னக இரயில்வே அணி 74 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய தெலுங்கானா அணி 55 புள்ளிகள் பெற்றது.

நான்காவது போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இதில் தமிழ்நாடு அணி 80 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய டெல்லி அணி 66 புள்ளிகள் பெற்றது.

Newsletter