தனது சாதனையை தானே முறியடித்த திருப்பூர் மாணவன்: 150 கிலோ பளுதூக்கி புதிய சாதனை!

பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாணவன் 150 கிலோ பளு தூக்கி தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் பெற அனுப்பியுள்ளார்.


திருப்பூர்: பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாணவன் 150 கிலோ பளு தூக்கி தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் பெற அனுப்பியுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவன் 135 கிலோ பழு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் அதை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளுதூக்கி அதை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார். அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்வில் சாதனைக்கான அங்கீகார சான்றிதழ் பெற்றார். இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Newsletter