தேசிய அளவிலான 31வது பெடரேசன் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கோவையில் இன்று துவங்கியது.

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், à®…ரைஸ் பவுண்டேசன், à®•ோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து 31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கும் தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் மார்ச் 22 – à®®à¯ தேதி முதல் 26 – à®®à¯ தேதி வரை நடைபெறுகிறது.அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டிகளில் முதல் 8 à®‡à®Ÿà®™à¯à®•ளை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் மாநிலங்களில் நடைபெற்ற மாநில சேம்பியன்சிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இந்த பெடரேசன் போட்டிகளில் கலந்து கொள்கிறது.



ஆண்கள் பிரிவு à®…ணியில் சாம்பியன் யூனிட் ஆஃப் இண்டர் இரயில்வே, à®šà®¾à®®à¯à®ªà®¿à®¯à®©à¯ யூனிட் ஆஃப் சர்வீசஸ், à®•ுஜராத்,கர்நாடகா, à®•ேரளா, à®ªà®žà¯à®šà®¾à®ªà¯, à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯ à®®à®±à¯à®±à¯à®®à¯ உத்ரகாண்ட் அணிகளும் பெண்கள் பிரிவில் சாம்பியன் யூனிட் ஆஃப் இண்டர் இரயில்வே, à®šà®¤à¯à®¤à¯€à®¸à¯à®•ர், à®Ÿà¯†à®²à¯à®²à®¿, à®•ேரளா, à®ªà®žà¯à®šà®¾à®ªà¯, à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯, à®¤à¯†à®²à¯à®™à¯à®•ானா à®®à®±à¯à®±à¯à®®à¯ மேற்கு வங்க அணிகளும் விளையாட உள்ளன. 



இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 à®²à®Ÿà¯à®šà®®à¯, à®‡à®°à®£à¯à®Ÿà®¾à®®à¯ பரிசாக ரூ.75 à®†à®¯à®¿à®°à®®à¯, à®®à¯‚ன்றாம் பரிசாக ரூ.50 à®†à®¯à®¿à®°à®®à¯ மற்றும் நான்காம் பரிசாக ரூ.25 à®†à®¯à®¿à®°à®®à¯ வழங்கப்படுகிறது.கோவையில் நடைபெறவுள்ள இந்த பெடரேசன் கோப்பைக்கான போட்டிகள் 25 à®†à®£à¯à®Ÿà¯à®•ளுக்கு பிறகு கோவையில் தற்போது நடைபெறுவது குறிப்பிடதக்கது.இன்று காலை நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி ஆர்மி சர்வீஸஸ் காப்ஸ் அணியுடன் மோதியது.இதில் ஆர்மி சர்வீஸஸ் காப்ஸ் அணி 57-51 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் ஓ.என்.ஜி.சி அணியுடன் செண்ட்ரல் ரயில்வே அணி மோதியது.இதில் ஓ.என்.ஜி.சி அணி 75-64 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் செண்ட்ரல் ரயில்வே அணியை வென்றது.பெண்களுக்கான போட்டியில் தெலுங்கானா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியதில் தெலிங்கான அணி 70-39 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் கேரள மற்றும் டெல்லி அணிகள் மோதின.இதில் கேரள் அணி 74-36 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது.மாலை நடைபெற்ற போட்டிகளில் தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து சட்டீஸ்கர் அணி விளையாடியது.இதில் தெற்கு ரயில்வே அணி 69-51 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை எதிர்த்து மேற்கு வங்க அணி மோதியது.ஒரு கட்டத்தில் புள்ளிகளில் பின் தங்கியிருந்த தமிழ்நாடு அணி வீராங்கனைகள் தங்களது திறமையான ஆட்ட வெளிபடுத்தி 72-67 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றனர்.



Newsletter