தேசிய அளவிலான கராத்தே போட்டியில்‌ முதலிடங்களை பிடித்த மாணவர்களுக்கு கோவை மேயர்‌ பாராட்டு..!

தேசிய அளவிலான கராத்தே போட்டியில்‌ முதலிடங்களைப் பிடித்த பள்ளி மாணவர்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ அழைத்து பாராட்டி நினைவு கோப்பை மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கினார்.


கோவை: 600-க்கும்‌ மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்கள்‌ கலந்து கொண்ட தேசிய அளவிலான கராத்தே போட்டியில்‌ முதலிடங்களை பிடித்த மாணவர்களுக்கு கோவை மேயர்‌ பாராட்டி நினைவு கோப்பை மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கினார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ திருச்செங்கோட்டில்‌ நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த 600-க்கும்‌ மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்கள்‌ கலந்து கொண்ட தேசிய அளவிலான கராத்தே போட்டியில்‌ முதலிடங்களைப் பிடித்த கோவை ஹோலி பேமிலி மெட்ரிக்குலேசன்‌ பள்ளி, ஸ்டோன்ஸ்‌ ஆங்கிலோ இந்தியன்‌ பள்ளி, கார்டன்‌ மெட்ரிக்குலேசன்‌ பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ அழைத்து பாராட்டி நினைவு கோப்பை மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கினார்.

உடன்‌ துணை மேயர்‌ ரா.வெற்றி செல்வன்‌, பெஸ்ட்வே கராத்தே அகாடமி தலைவர்‌ சிகான்‌ ஜமீஷா, சிகான்‌ ஹமீது பிர்தெளஸ்‌, கோவை மாவட்ட உடற்பயிற்சி சங்க தலைவர்‌ ஜிம்‌ சுகுமார்‌ ஆகியோர்‌ இருந்தனர்.

Newsletter