ஷார்ஜாவில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய காரமடை வீரர் நவீன்ராஜ் இரண்டு கோப்பைகளை வென்று சாதனை

இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பாகப் பந்து வீசிய நவீன்ராஜ் இந்திய அணி தோல்வி அடைந்த போதும் ஆட்டநாயகன் விருதை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.



கோவை: à®·à®¾à®°à¯à®œà®¾à®µà®¿à®²à¯ நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய காரமடையை சேர்ந்த 'CAP'-அகாடமி வீரர் நவீன்ராஜ் இரண்டு கோப்பைகளை வென்று சாதனை படைத்தார்.



சர்வதேச யூத் கிரிக்கெட் லீக் போட்டிகள் ஷார்ஜாவில் கடந்த ஒரு வாரமாக நடந்தன. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நவீன்ராஜ் à®µà®¯à®¤à¯ 24 இடம்பெற்றிருந்தார்.

இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்தது. காரமடை கிரிக்கெட் வீரர் நவீன்ராஜ் à®¤à¯Šà®Ÿà®°à¯ முழுவதும் சிறப்பாகப் பந்துவீசிய வீரர் என்ற கோப்பையை வென்றார்.

மேலும் இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பாகப் பந்து வீசியநவீன்ராஜ் à®‡à®¨à¯à®¤à®¿à®¯ அணி தோல்வி அடைந்த போதும் ஆட்டநாயகன் விருதை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் நவீன்ராஜ் à®•ூறுகையில், "நான் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். இருப்பினும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் எனது கவனத்தைச் செலுத்தி வருகிறேன்.

பல கட்ட போராட்டங்களுக்குப் பின் எனக்கு எனது விடாமுயற்சி காரணமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஷார்ஜாவில் கடந்த ஒரு வாரமாக நடந்த சர்வதேச கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று என்னால் முடிந்த அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தினேன்.

இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். இறுதிப் போட்டியிலும் கடுமையாகப் போராடி தோல்வி அடைந்தோம்.

இரண்டாம் இடம் இந்திய அணி பெற்றது. எனக்கு இரண்டு கோப்பைகள் கிடைத்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு ஆகும். எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து அதிக பயிற்சி மேற்கொண்டு மேலும் பல போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை.

எனக்கு உத்வேகம் அளித்து உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், நண்பர்கள், ஸ்பான்சர் மற்றும் என்னுடன் விளையாடும் கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10:30 மணி அளவில் விமானம் மூலம் நான் கோவை வந்தடைந்தேன்.

இவ்வாறு கிரிக்கெட் வீரர் நவீன்ராஜ் à®•ூறினார்.

Newsletter