பெங்களூரில் நடைபெற்ற ஆல் இந்தியா சிலம்பம் பிரிமியம் லீக் போட்டி: கோவையைச் சேர்ந்த மாணவர்கள் 15 தங்கப்பதக்கம் வென்று சாதனை..!

தமிழக அரசு சிலம்பாட்டம் பயிற்சி பெற ஒரு பெரிய மைதானத்தை கொடுத்தால் மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: பெங்களூர் பன்னார்கட்டா பகுதியில் உள்ள லயோலா காம்போசிட் காலேஜ் சார்பில் கடந்த 21ம் தேதி இந்தியா சிலம்பம் பிரிமியம் லீக் சார்பில் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது.

இந்த சிலம்பாட்டம் போட்டியில் இந்திய அளவில் 800க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவையைச் சேர்ந்த உலக சிலம்பாட்ட கழகம் பயிற்சியாளர் பிரபு மற்றும் மாரிமுத்து தலைமையில் 86 மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.



இந்த போட்டியில் 43 மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதில் 15 மாணவர்கள் தங்கப்பதக்கமும், 15 பேர் சில்வர் பதக்கமும், 13 மாணவர்கள் பிரான்ஸ் பதக்கமும் வென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் மற்றும் பயிற்சியாளர் பிரபு மற்றும் மாரிமுத்து கூறும்போது:-

தற்போது சிலம்பாட்ட பயிற்சியில் மாணவர்கள் அதிக அளவு ஆர்வம் கொண்டு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் சிலம்பாட்டத்தில் தனி சிலபஸ் கொண்டு வர வேண்டும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறார். பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத்தர நல்ல ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

இந்த சிலம்பாட்ட பயிற்சி மூலம் மாணவர்களுக்கு உடல் வலிமையும் பெற்று புத்துணர்வு கொண்டு வருகின்றனர். மாநில அரசு சிலம்பாட்டம் பயிற்சி பெற ஒரு பெரிய மைதானத்தை கொடுத்தால் மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter