மாநில வாலிபால் போட்டி: கற்பகம் பல்கலை சாம்பியன்

2-வது லீக் சுற்றில் கற்பகம் பல்கலை மற்றும் அகர்வால் அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 5-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது.


கோவை: மாநில வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது.

கடந்த 11-2022 முதல் 21-2022 வரை இரண்டு நாட்கள் கே.சி.கே கணுவாய் வாலிபால் கிளப் 19-வயதிற்குட்பட்ட அவர்களுக்கான வாலிபால் போட்டி மாநில அளவில் நடத்தியது. அதில், தமிழகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப் போட்டியில் லீக் தகுதி சுற்றுக்கு கற்பகம் பல்கலை, கே.சி.கே அணி, திருப்பூர் அணி அகர்வால் அணி லீக் தகுதி சுற்றுக்கு முன்னேறியது. முதல் லீக் போட்டியானது கற்பகம் பல்கலை மற்றும் திருப்பூர் அணி கிடையாக நடைபெற்றது.



இதில் 5-க்கு 3-என்ற செட் கணக்கில் கற்பகம் அணி வெற்றி பெற்றது. 2-வது லீக் சுற்றில் கற்பகம் பல்கலை., மற்றும் அகர்வால் அணி அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 5-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது.

மூன்றாவது லீக் போட்டி கற்பகம் பல்கலை மற்றும் கே.சி.கே அணிக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில், கற்பகம் பல்கலை., களை அணி 5-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டாவது இடத்தை முறையே கே.சி.கே அணியும், மூன்றாவது இடத்தை திருப்பூர் அணியும் 4-வது இடத்தை அகர்வால் அணியும் பெற்றது.

Newsletter