வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ விளையாட்டு போட்டிகளில்‌ சாதனை

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ மாநில மற்றும்‌ தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ பங்கேற்று பல்கலைக்கழகத்திற்கும்‌, தமிழ்நாடு மாநிலத்திற்கும்‌ பெருமை சேர்த்துள்ளனர்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ மாநில மற்றும்‌ தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ பங்கேற்று பல்கலைக்கழகத்திற்கும்‌, தமிழ்நாடு மாநிலத்திற்கும்‌ பெருமை சேர்த்துள்ளனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ சிவகாசியில்‌ 62-வது தமிழ்நாடு மாநில ஜூனியர்‌ மற்றும்‌ யூத்‌ கேரம்‌ சாம்பியன்‌ஷீப்‌ போட்டி 22.12.2021 முதல்‌ 26.12.2021 வரை நடைபெற்ற போட்டிகளில்‌ பங்கேற்றனர்‌.



இந்த போட்டியில்‌ ஆண்கள்‌ பிரிவில்‌ ஜி. மகேஷ்‌ இளமறிவியல்‌ தோட்டக்கலை மூன்றாம்‌ ஆண்டு ஜூனியர் சாம்பியன்‌ஷீப்‌ மற்றும்‌ பெண்கள்‌ பிரிவில்‌ செல்வி பி. சினகபிரபா, இளமறிவியல்‌ தோட்டக்கலை நான்காம்‌ ஆண்டு வெண்கலப்‌ பதக்கமும்‌ வென்றனர்‌.

ஜி. மகேஷ்‌ அக்டோபர்‌ 2019 இல் (“COVID-19”க்கு முன்) மாலத்தீவுக்கு எதிரான கேரம்‌ டெஸ்ட்‌ போட்டியில்‌ இந்திய நாட்டைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தி ரப்பரை வென்றுள்ளார்‌. அவர்‌ இலங்கை மற்றும்‌ மாலத்தீவுகளுடன்‌ முப்பெரும்‌ நாடுகளின்‌ தலைவர்‌ கோப்பை கேரம்‌ போட்டியிலும்‌ பங்கேற்று தனிநபர்‌ போட்டியில்‌ வெள்ளிப்‌ பதக்கம்‌ வென்றார்‌.



இதை போன்றே, பஞ்சாப்‌ மொஹாலியில்‌ டிசம்பர்‌ 16 முதல்‌ 18 வரை நடைபெற்ற 59வது தேசிய ரோலர்‌ ஸ்கேட்டிங்‌ சாம்பியன்ஷீப்‌ போட்டியில்‌ ஆர்‌. அபிநயா இளமறிவியல்‌ தோட்டக்கலை முதலாம்‌ ஆண்டு மாணவி வெண்கலப்‌ பதக்கம்‌ வென்று பல்கலைக்கழகத்திற்கும்‌, தமிழ்நாடு மாநிலத்திற்கும்‌ பெருமை சேர்த்துள்ளார்‌. அவர்‌ தனது 10வது வயதில்‌ ரோலார்‌ ஸ்கேட்டிங் பயிற்சியைத்‌ தொடங்கினார்‌.

கடந்த 2019 ஆம்‌ ஆண்டில்‌ ஸ்பெயினின்‌ பார்சிலோனாவில்‌ நடைபெற்ற ஜூனியர்‌ உலக சாம்பியன்‌ஷீப்‌ போட்டியில்‌ கலந்து கொண்டு தமிழ்நாடு அணிக்கு தலைமையேற்று இந்தியாவைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தினார்‌. மேலும்‌ அதில்‌ இந்திய அணி 4-வது இடத்தைப்‌ பிடித்தது. இதுவரை பல்வேறு மாநில, தேசிய மறறும்‌ சர்வதேச போட்டிகளில்‌ 124-பதக்கங்களை வென்றுள்ளார்‌. மாணவர்களின்‌ சாதனைகளை பல்கலைக்கழக பதிவாளர்‌, முதன்மையர்(மாணவர்‌ நல மையம்‌) முதன்மையர்‌ (வேளாண்மை), முதன்மையர்‌ (தோட்டக்கலை), உடற்கல்வி இயக்குனர்‌ ஆகியோர்‌ பாராட்டினர்‌.

Newsletter