கோவையில் TFSC சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்..!

இதில் கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் Track force sports club TFSC சார்பில் ABLED Kovai Trophy மாற்றுத்திறனாளிகளுக்கான மிகப்பெரும் தமிழக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குனியமுத்தூர் நூர் சேட் பள்ளியில் நடைபெற்றன.

இதில் கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேரா வாலிபால், ஃபுட்பால், பேரா நட்பால், பேராஷூட் போன்ற போட்டிகளில் பங்கேற்றனர்.



இந்த போட்டிகளின் முடிவில் பரிசளிப்பு விழாவில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், கோவை காவல் துறை இணை ஆணையாளர் ரகுபதி ராஜா JRD REALTORS டாக்டர் ராஜேந்திரன், நூர் சேட் குரூப்ஸ் தலைவர் கமால், செயலாளர் இம்ரான்கான், பார்க் இன்ஸ்டிட்யூட்சன் சேர்மன் அணுஷா ரவி, ரத்னம் கல்லூரி இயக்குனர் Dr நாகராஜ், SA வெஜிடபிள்ஸ் நிறுவனர் SA பஷீர், ஸ்ட்ரீட் அரேபியா சஹபத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்து தலைவர் PS உமர் பாரூக், JIH மக்கள் தொடர்பு செயலாளர் M.அப்துல் ஹக்கீம், கோவை மொபைல் சங்கம் தலைவர் மன்சூர், SIO தலைவர் ஆஷிக், டி எஃப் எஸ் ஸி தலைவர் சர்ஜூன், TMS அப்பாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டு கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினர்.

Newsletter