கோவையில் மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயம்

சைக்கிளிங் போட்டியைக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதேபோல, இருசக்கர வாகன பந்தயத்தைக் கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவி சந்திரன் தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் வெஸ்டர்ன் வேலி (Western Valley) மற்றும் டீம் 55 ரேசிங் (Team 55 Racing) இணைந்து எம்.டி.பி (Mountain bike racing) சைக்கிளிங் போட்டிகள் நடத்தினர்.

சாகசம் நிறைந்த எம்.டி.பி சைக்கிளிங் போட்டிகள் சமீபமாகக் கோவையில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த போட்டிகளுக்கு அதிக வரவேற்பு இல்லாத சூழலில் தற்போது இப்போட்டிகளுக்குக் கோவையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.



இந்த நிலையில் கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடைபெற்ற எம்.டி.பி சைக்கிளிங் போட்டிகள் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த சைக்கிளிங் போட்டியைக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா (Rajagopal Sunkara) கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதேபோல, தொடர்ந்து நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயத்தைக் கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவி சந்திரன் தொடங்கி வைத்தார்.



Newsletter