பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி.!!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 15-அணிகள் பங்கேற்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 15-அணிகள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி இன்று தொடங்கியது.

இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.



நாக்-அவுட் முறையில் நடைபெற்று வரும் இப்போட்டியில், வெற்றி பெறும் நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு நாளை லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.



இதில் திறமையாக விளையாடி வெற்றி பெறும் மாணவிகள் 12-பேர் தேர்வு செய்யப்பட்டு வரும் 13-ஆம் தேதி சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அணி சார்பில் விளையாடுவார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

வெற்றி இலக்கை நோக்கி மாணவிகள் உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர். போட்டிகளை ஏராளமான கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Newsletter