மணல் சிற்பம் மற்றும் ஓவியப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கிணத்துக்கடவு அரசு பள்ளி மாணவிகள்.!!

மணல் சிற்பம் போட்டியில் கிருத்திகா மாநில அளவில் முதலிடத்தையும், ஓவியப்போட்டியில் அனுசியா மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்ற நிலையில், கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்.எல்.ஏ.,தாமோதரன் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: மணல் சிற்பம் மற்றும் ஓவியப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்.எல்.ஏ.,தாமோதரன் பாராட்டு தெரிவித்தார்.

சேலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான மணல் சிற்பம் மற்றும் ஓவியப் போட்டியில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் கீர்த்திகா மற்றும் அனுசியா பங்கேற்றனர்.

இதில் மணல் சிற்ப போட்டியில் கலந்துகொண்ட கிருத்திகா மாநில அளவில் முதலிடத்தையும், ஓவியப்போட்டியில் அனுசியா மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற இரு மாணவிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதேபோல் மணல் சிற்பம் மற்றும் ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு இன்று எம்.எல்.ஏ., தாமோதரன் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.



கிணத்துக்கடவு எம்எல்ஏ அலுவலகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குச் சால்வை அணிவித்துப் பாராட்டு தெரிவித்த எம்.எல்.ஏ., தாமோதரன், மேலும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தப் மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து உறுதுணையாக இருந்த கிணத்துக்கடவு அரசுப் பள்ளி ஆசிரியை கௌசல்யாவுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.

Newsletter