பொள்ளாச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோவிட் CCஅணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


பொள்ளாச்சி: திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோவிட் CC அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பொள்ளாச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டி பொள்ளாச்சி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்று விளையாடியது . நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் கோவிட் CC அணியும், ஆத்து பொள்ளாச்சி LFC அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 20-ரன்கள் வித்தியாசத்தில் கோவிட் CC அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு 10,000 ரூபாய், மூன்றாம் பரிசு பெற்ற அணிக்கு ரூ 5,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மணிமாறன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கோ. சி மணி, கே.வி ஆறுமுகம், விஜயகுமார், சிவானந்தம், தங்கவேலு, ஜெயக்குமார், பட்டீஸ்வரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter