உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் தென்னிந்திய அளவிலான கேரம் போட்டி.!!

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜுக்கு முதல் பரிசாக ரூ.20-ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சசிக்கு ரூ.10-ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற கோவையைச் சேர்ந்த நிஜாம் என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டது.


கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில், நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான கேரம் போட்டியில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாள் விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகக் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பொள்ளாச்சி நகர திமுக அலுவலக கட்டிடத்தில் கேரம் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகத் தென்னிந்திய அளவிலான ஒற்றையர் பேஸ் கேரம் போட்டி நேற்று தொடங்கியது.



இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 130-பேர் கலந்து கொண்டனர்.



நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று விளையாடிய கேரம் வீரர்கள் சாதுர்த்தயமாக கேரம் காயின்களை நகர்த்தி வெற்றி இலக்கை நோக்கி விளையாடினர். இறுதியாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

வெற்றி பெற்ற தங்கராஜுக்கு முதல் பரிசாக ரூ.20-ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சசிக்கு ரூ.10-ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்ற கோவையைச் சேர்ந்த நிஜாம் என்பவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter