கோவை மாவட்ட அளவிலான


கோவை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் கோவை மாவட்ட வாலிபால் லீக் சாம்பியன் சிப் 2017 ஆண்களுக்கான டி.எஸ் நடராஜன் நினைவு கோப்பை போட்டி மற்றும் பெண்களுக்கான ஜெயந்தி தர்மலிங்கம் கோப்பைக்கான போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஆண்களுக்கான போட்டியில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியும், கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மோதியது. 



இப்போட்டிகளின் முடிவில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதலிடத்தினைப் பெற்று கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் காசோலையினையும், இரண்டாவது இடத்தினை கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வென்று ரூபாய் 8 ஆயிரம், மூன்றாவது இடத்தினை காட்டன் சிட்டி கோவை அணி பெற்று 6 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம் பெற்ற என்.ஜி.பி கலைக் கல்லூரி விளையாட்டு வீரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. 

பெண்களுக்கான போட்டியில் மொத்தம் 4 அணிகள் மோதின. இதில், முதல் இடத்தினை கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோப்பையினை வென்று ரூபாய் 10 ஆயிரம் வென்றது. தொடர்ந்து, இரண்டாம் இடத்தினை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணி வென்று ரூபாய் 8 ஆயிரம் பெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றதற்காக இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், முதல்வர் பாபாஞானகுமார், உடற்கல்வி இயக்குநர் சரவணன் ஆகியோர் இவ்வணியினரை பாராட்டினர்.

Newsletter