மாநில அளவிலான தடகள போட்டி: பதக்கம் வென்ற கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு.!!

சென்னையில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில், பதக்கம் வென்ற கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: சென்னையில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில், பதக்கம் வென்ற கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த வாரம் மாநில அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ், 400-மீட்டர் ஓட்டபந்தையத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் மற்றொரு போட்டியான தொடர் ஓட்ட போட்டியில் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் என மொத்தம் 2-பதக்கங்களைத் தட்டி சென்றார்.



இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஏட்டு கோவிந்தராஜை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், டி.எஸ்.பி திருமால், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Newsletter