சிட்டிங் வாலிபால் பாரா ஒலிம்பிக் போட்டி: சாதனை புரிந்த மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு.!!

கோவையில் நடைபெற்ற சிட்டிங் வாலிபால் பாரா ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய முழு திறமையை காட்டி வெற்றி கோப்பையை பறித்த மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நடைபெற்ற சிட்டிங் வாலிபால் பாரா ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய முழு திறமையை காட்டி வெற்றி கோப்பையை பறித்த மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

20 வருடங்களில் முதல் முறையாக தமிழ்நாடு பாராலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் வென்ற கோவை வெற்றி வீராங்கனைகள். நமது கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் தமிழ்நாடு பாராலிம்பிக் கைப்பந்து சங்கத்தின் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான 9-வது தமிழ்நாடு பாராலிம்பிக் கைப்பந்து விளையாட்டு போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கோயமுத்தூர் மாவட்ட அனைத்துவகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மகளிர் அணி " கோவை குயின்ஸ்" முதல் பரிசை வென்றது.

கோவை மண்ணிற்கு பெருமை சேர்த்தனர். இவ்வெற்றியை வீராங்கனைகள் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் பகிர்ந்து நல்வாழ்த்துக்கள் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வெற்றிக் கோப்பையுடன் இன்று (19.10.2021) கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் சந்தித்து அவர்களது வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர்.

காவல் கண்காணிப்பாளர் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்குக் கோவை மாவட்ட காவல் துறை சார்பாகப் பாராட்டுகளையும், மேலும் இதுபோன்ற வெற்றிகள் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Newsletter