துப்பாக்கி சுடுவதில் சாதனை: கோவை மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்.!!

உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில், கோவை மாணவி வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


கோவை: உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில், கோவை மாணவி வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தென் அமெரிக்காவில் உள்ள பெரு பகுதியில் உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில், கடந்த மாதம் துவங்கி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இப்போட்டியில், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்பட 45-நாடுகள் பங்கேற்றன. இதில், இந்தியா சார்பில் பல்வேறு பிரிவுகளில் 74-வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இப்போட்டியில், 25-மீ ஸ்டாண்டர்ட் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த நிவேதா நாயர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.



தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவராகவும், இந்திய அணிக்குத் தகுதி பெற்ற ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter