தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற கோவை வீராங்கனைகள்.!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர் மாவட்ட அனைத்துவகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மகளிர் அணி "கோவை குயின்ஸ்" தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசை வென்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர் மாவட்ட அனைத்துவகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மகளிர் அணி "கோவை குயின்ஸ் "தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசை வென்றனர்.



கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி முன்னிட்டு, தமிழ்நாடு பாராலிம்பிக் கைப்பந்து சங்கத்தின் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான 9-வது தமிழ்நாடு பாராலிம்பிக் கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோயமுத்தூர் மாவட்ட அனைத்துவகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மகளிர் அணி "கோவை குயின்ஸ்" முதல் பரிசை வென்றனர்.

இதுகுறித்து மகளிர் சங்கத்தின் தலைவி டாக்டர் ஜெயபிரபா கூறுகையில், ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 9-th Tamil Nadu Sitting Volleyball Championship-2021 விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் அணியில் சங்கத்தின் மகளிரணி கலந்துகொண்டு வெற்றி பெற்றது மிகவும் பெருமை அளிக்கிறது.

மேலும், மகளிர் மாற்றுத்திறனாளிகள் இதனால் வரை சமநிலையில் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், மகளிர்க்கான விளையாட்டுப் பயிற்சிக் கூடம் எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இனிவரும் காலங்களில் மகளிருக்கு என தனி விளையாட்டு பயிற்சி மையங்கள் அரசாங்கம் அமைத்து உரியப் பயிற்சி அளித்தால் ஆசிய பாராலிம்பிக் போட்டியில் கலந்து வெற்றி பெற வழிவகுக்கும் என கூறினார். மேலும் தங்களது சங்கத்தின் வெற்றி மங்கையர்களின் சாதனைகள் தொடரும் என பெருமிதம் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Newsletter