தென்னிந்திய அளவிலான டென்னிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக அணிக்கு இரண்டாம் இடம்.!!

பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குக் கேரளா அணியும் தமிழக அணியும் தேர்வு பெற்றன.


கோவை: தென்னிந்திய அளவிலான டென்னிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி இரண்டாம் இடம் பிடித்தது.

தென்னிந்திய அளவிலான டென்னிஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆந்திராவில் கடந்த செப்-21 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் தமிழக அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குக் கேரளா அணியும் தமிழக அணியும் தேர்வு பெற்றன.

இதில் கேரளா அணி தமிழக அணியை வீழ்த்தி முதலிடத்தை வென்றது.



தமிழக அணி இரண்டாம் இடம் பிடித்தது.



சிறப்பாக விளையாடிய வீரர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அணியில் காரமடை சேர்ந்த நவீன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் கோவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter