துரோ பால் போட்டி: கோவை திருநங்கைகள் கோப்பை வென்று சாதனை..!

ஈரோட்டில் நடைபெற்ற துரோ பால் போட்டியில் கோவையை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு கோப்பை வென்று சாதனை படைத்துள்ளனர்.


ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற துரோ பால் போட்டியில் கோவையை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு கோப்பை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கோவையில் உள்ள திருநங்கைகள் ஒன்றாகச் சேர்ந்து தொடர்ந்து துரோ பால் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 29ம் தேதி ஈரோட்டில் உள்ள சூரியா என்ஜினீயரிங் கல்லூரியில் துரோ பால் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது.



அதில், கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் விளையாடுவதற்காக கலந்து கொண்டனர். இதில் இவர்கள் கலந்துகொண்டு முதல் இடத்தை தட்டிச் சென்றனர்.



இவர்களுக்கு மங்கையானவன் பவுண்டேசன் சார்பாக மறைந்த முன்னாள் பயிற்சியாளர் நினைவாக சுழற்கோப்பை வழங்கப்பட்டது. முதல்முறையாக திருநங்கைகள் ஒன்றாகச் சேர்ந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது இதுவே முதல் முறை என அணியின் உடைய கேப்டன் ராகவி என்பவர் நம்மிடம் கூறினார்.

சுழற்கோப்பை பெற்ற திருநங்கை அணியினருக்கு சமூக அமைப்பு மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter