இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய அளவிலான வூசூ கலை: கோவையில் நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கம்.!!

கோவை: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய அளவிலான வூசூ கலை நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கம் கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.


கோவை: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய அளவிலான வூசூ கலை நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கம் கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வூசூ தற்காப்புக் கலை சங்கத்தின் சார்பில் தேசிய அளவிலான வூசூ கலை நடுவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் இந்தியா முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட நடுவர்கள் பங்கேற்றுள்ளனர். சீன தற்காப்புக் கலைகளில் ஒன்றான வூசூ தற்காப்புக் கலை இரு வடிவங்களைக் கொண்டுள்ளது.



டயோலு மற்றும் சாண்டா என்ற இரண்டு வடிவங்களுக்கும் தனித்தனியாகப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் பயிற்சியைச் செய்து காட்டும் போது நடுவர்களாக உள்ளவர்கள் அளவீடு செய்து மதிப்பெண்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு மிகச்சரியாக மதிப்பெண் கொடுப்பவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதன் பின்னர் அவர்கள் போட்டி நடுவர்களாகத் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற முடியும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



மேலும் இந்த வூசூ கலையைக் கற்றுக்கொண்டால் மத்திய அரசுப் பணியில் இட ஒதுக்கீடும் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter