தேசிய தடகள போட்டி: கோவை மாணவர் தங்கம் வென்று சாதனை..!

கோவை: தேசிய அளவில் 20 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.


கோவை: தேசிய அளவில் 20 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோவையில் இருந்தும் பல மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பங்கேற்ற கோவை மாணவன் டொனால்டு (18) மும்முறை தாண்டும் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் 15.76 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார்.

இதேபோல், கோவை மாணவி ஒலம்பா ஸ்டெபி 400 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 64 வினாடிகளில் கடந்தார். சாதனை படைத்த மாணவர்களை பயிற்சியாளர் நிஜாமுதீன், சக வீரர்கள் பாராட்டினர்.

இது குறித்து பயிற்சியாளர் நிஜாமுதீன் கூறுகையில்,‘‘டொனால்டு தேசிய அளவிலான மும்முறை தாண்டும் போட்டியில் முதலிடத்தை பிடித்ததை தொடர்ந்து, கென்யா நாட்டில் வருகிற 17-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறும் உலக அளவிலான இளையோர் தடகள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மும்முறை போட்டியில் கோவையைச் சேர்ந்த கமல்நாத் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து தற்போது டொனால்டு கலந்து கொள்ள உள்ளார்’’ என்று தெரிவித்தார்.

Newsletter