பொள்ளாச்சியில், சரவணா ஸ்போர்ட்ஸ் அரினா சார்பில், நடைபெற்ற பாக்ஸ் கிரிக்கெட் போட்டியில், ஐ.எம். ஸ்போர்ட்ஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி

கோவை: பொள்ளாச்சியில், சரவணா ஸ்போர்ட்ஸ் அரினா சார்பில் நடைபெற்ற, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 16 அணிகள் பங்கேற்ற பாக்ஸ் கிரிக்கெட் போட்டியில், ஐ.எம். ஸ்போர்ட்ஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொள்ளாச்சி வடுகபாளையத்தில் உள்ள சரவணா ஸ்போர்ட்ஸ் அரினா சார்பில், இன்று பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. ஒரு அணிக்கு 6 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டிகள், ஐந்து ஓவர் போட்டிகளாக நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஐ.எம். ஸ்போர்ட்ஸ் அணியும், பி.கே. களப்பணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐ.எம். ஸ்போர்ட்ஸ் அணி 5 ஓவரில் 95 ரன்களை குவித்தது. இரண்டாவதாக விளையாடிய பி.கே. கிளப் அணி 5 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில், ஐ.எம். ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு, கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

Newsletter